Description
அரசன் சுத்தோதனன் துயரக் கடலில் மூழ்கியிருந்தான். பொன்னும், பொருளும், அன்பும், மரியாதையும் மற்றும் சகலவிதமான சவுகரியங்களும் அவனது அழகான வாரிசான சித்தார்த்தனைச் சூழ்ந்திருந்தபோதிலும் அவன் திருப்தியடையவில்லை.
அரச உடைகளைக் களைந்தெறிந்து கையில் பிச்சை வாங்கும் குவளையை ஏந்தி, தனது சொகுசான அரச வாழ்க்கையைத் துறந்து, குடும்பத்தினரை விட்டு இளவரசன் சித்தார்த்தன் ஒருநாள் இரவு அரண்மனையிலிருந்து வெளியேறினான்.
ஒருமர நிழலில் அமர்ந்து வாழ்க்கையின் உண்மை தத்துவத்தை அறிந்துகொள்ள ஒரு சன்யாசி வாழ்க்கையை மேற்கொண்டான். அவனுடைய தேடுதல் அவனை அறிவியலும், பகுத்தறிவும் கொண்ட ஒரு தெளிவான நிலையில் கொண்டுபோய் நிறுத்தியது. விழிப்புணர்ச்சி பெற்ற அவன் புத்தர் ஆனான்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.