அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே
₹100 ₹95
- Author: எம் ஜி சுரேஷ்
- Category: வரலாறு
- Sub Category: கட்டுரை, மெய்யியல்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
Additional Information
- Pages: 96
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9788177203462
Description
வாய்மையே வெல்லும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் போன்று எண்ணற்றக் கோட்பாடுகளை அன்றாட வாழ்வில் நாம் ஊன்றுகோல்களாகக் கொள்கிறோம்.
நடைமுறையிலிருந்து உருவாகிறது கோட்பாடு. அது இயற்கையான உலகின் காட்சியளவீடுகளுக்குக் கவனமாகச் சிந்தித்து, அறிவியல் முறைப்படி கட்டமைக்கப்பட்ட விளக்கமாகும்; இது பல உண்மைகளையும் கருதுகோள்களையும் உள்ளிணைக்கிறது. அத்துடன் தனிமனிதரிடமும் சமூகத்திலும் செயல்திறனுக்கான வளமிக்க ஒரு கையளிப்பாகவும் இருக்கிறது.
இந்த நூலில் எம். ஜி. சுரேஷ், கோட்பாடுகள் உருவாகி, அது கிளைக்கும் விதத்தைப் பின்நவீனத்துவ நோக்கில் விவரிக்கிறார். ‘அறிவு’ கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் உரியதாக இருந்தது. இன்று அது ஒரு சரக்காக மாறிவிட்டது. சந்தையும் நுகர்வும் ‘அறிவு’ என்ற கருத்தின் பொருளை எவ்வாறு மாற்றியிருக்கிறது என்பதிலிருந்து தொடங்குகிறார் நூலாசிரியர். ஐரோப்பிய, இந்தியத் தத்துவங்களின் வரலாற்றையும் இணைத்து, ஒவ்வொரு கோட்பாட்டையும் பின்வந்த கோட்பாடு எப்படி ரத்து செய்கிறது என்பதை மெல்லிய நகைச்சுவையுடன் புரிய வைக்கிறார்.
கோட்பாடுகளை அறிவது வாழ்க்கையை அறிவதற்கு ஒப்பானது என்பதுதான் ஆசிரியர் கூறும் மையப் புள்ளி. பெரியாரிலிருந்து
கருணாநிதி வரை திராவிடக் கோட்பாடு எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை ஓர் எடுத்துக்காட்டாகவும் விளக்குகிறார் நூலாசிரியர்.
குறிப்பாக, பின்நவீனத்துவக் கோட்பாட்டின் வளர்ச்சி மனித
சிந்தனையைப் பல தடைகளிலிருந்தும் விடுவிக்கக் காரணமாய் அமைந்ததை இந்த நூல் தெளிவாகக் காட்டுகிறது. கோட்பாடுகளைக் குறித்து பல நூல்களை எழுதியிருக்கும் எம். ஜி. சுரேஷ், இந்த நூலிலும் பல சிக்கலான கோட்பாடுகளை ஆர்வமூட்டும் எளிய நடையில் விவரிப்பது புதிய முயற்சியாக இருக்கிறது.
கோட்பாடு, கோட்பாடாக்கம், அதைப் பயன்படுத்துதல் குறித்து அறிய விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.
Be the first to review “அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.