Description
இந்த நவீன வாழ்வுதரும் நம்பிக்கைகளுடன் மட்டும் தன்னைக் கரைத்துக்கொள்ளாமல், முன்பிருந்த தன் வாழ்வை அதன் உலகை அதன் வாழ்வியல் காட்சிகளை அற்புதமான கவிதைகளாக்கியுள்ளார். பிறரது கவனத்தை ஈர்ப்பதற்கும், ரசனைகளை வெளிப்படுத்தவும், மேதமையைக் காட்டவும், வாழ்க்கைக்காக பயன்படுத்திக்கொள்ளவும் தெரிந்தவனுக்கு இக்கவிதைகளை எழுதத் தெரிந்திருக்காது. பெரும் காலவோட்டத்தில் தன்னைக் கரைத்துக்கொள்ளாமல் ‘தொடர்ந்து எழுது’ என்ற புத்திமதிகளுக்கும் செவிசாய்க்காமல் தோன்றியபோது எழுதிக்கொண்டிருகிறார். இத்தன்மை கொண்டவர்கள் பெரும் படைப்பாக்கங்களுக்குப் பிறகும் அதிலிருந்து விலகி பிறிதொரு உலகிலும், தம்மை ஒப்புக்கொடுத்திருப்பார்கள். ஸ்ரீநேசன் அவர்களில் ஒருவர்”
~ கண்டராதித்தன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.