நம் காலத்து நாயகன்
₹190 ₹181
- Author: மிகெயில் லெர்மன்தோவ்
- Category: மதம் மற்றும் ஆன்மீகம்
- Sub Category: இஸ்லாம், கட்டுரை, மொழிபெயர்ப்பு
- Publisher: அடையாளம் பதிப்பகம்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
‘நம் காலத்து நாயகன்’ மிகைல் லேர்மன்தவின் ஒரு முன்னோடி உளவியல் நாவல். இந்த நாவலில் பயன்படும் காலவரிசையற்ற, துண்டு துண்டான கதை கட்டமைப்பு ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, லியோவ் தல்ஸ்தோய் போன்ற சிறந்த எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு.
‘நம் காலத்து நாயகன்’ ஒரு சண்டைக்குப் பிறகு காகசஸுக்கு அனுப்பப்பட்ட பிச்சோரின் என்ற இளம் இராணுவ அதிகாரியின் கதையைச் சொல்கிறது.
1830களில் பனிபடர்ந்த காக்கேஷிய மலைத்தொடரைக் கடந்து செல்லும் போது, பெயர் தெரியாத பயணியொருவனுக்குப் பொழுதுபோக வேண்டியிருக்கிறது. மக்ஸீம் மக்ஸீமிச் எனும் நடுவயது இராணுவ அதிகாரியொருவர் அவனுக்கு அருகில் அறிமுகமாகியிருக்கிறார். அவருடைய இராணுவப் பணிக்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை அவன் நினைவுகூரச் சொல்லிக் கேட்கிறான். தன் நினைவுகளை அது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பீடிக்கப் போகிறது என்பதை அவன் உணரவில்லை. அந்த அதிகாரியின் முன்னாள் இராணுவத் தோழரின் முரண்நகையான வாழ்க்கைக் கதையை அவர் விவரிக்கிறார். அந்தக் கதையில் அந்தப் பயணி ஆழ்ந்துபோக நேர்கிறது. பிச்சோரின் எனும் இளைஞனின் கதை அது. அவன் வசீகரமானவன். ஆனால் எதிலும் நம்பிக்கையற்றவன். மூப்பேறிக்கொண்டிருக்கும் இராணுவ அதிகாரியின் வாயிலாகக் கதை தொடங்குகிறது. பிறகு, கதைசொல்லியின் சாட்சி ரூபமாக விவரிக்கப்படுகிறது. இறுதியில், தன்னுடைய சொந்த, யோசிக்க வைக்கிற நாட்குறிப்புகளின் வழியே அந்தக் கதை விரிந்தெழுந்து முடிவுறுகிறது.
இந்தப் பதிப்பில் 19, 20ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் வாழ்ந்த கலைஞர்களின் (லேர்மன்தவ் உள்பட) 16 விளக்கப்படங்களும் ஆழ்ந்து படிப்பதற்கான ‘வாசகர் வழிகாட்டி’ என்னும் புதிய பகுதியும் இடம்பெறுகின்றன.
Be the first to review “நம் காலத்து நாயகன்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.