Description
இந்தப் புத்தகம் மீண்டும் உலகமெங்கும் இன்று பேசப்படும் சமத்துவத்துக்கான தத்துவச் சிந்தனையைச் சொல்லும் புதுக் கம்யூனிசம் பற்றிய புதுமையான கட்டுரையுடன் தொடங்குகிறது. கரோனா பரவலுடன் முதலாளிய உலகம் மாறுகிறது. இன்று தரமான விமரிசனத் தொகுப்புகள் வருவதில்லை என்ற குறை உண்டு. மொத்தம் பதினைந்து கட்டுரைகளைக்கொண்ட இந்த நூலில் ஞானக்கூத்தன், தமிழச்சி போன்ற இன்றைய தமிழிலக்கியத்தின் முக்கியமானவர்கள் பற்றிய புதிய பார்வைகள் வெளிப்பட்டுள்ளன. மேற்கத்திய தத்துவம், கோட்பாடு பற்றியும் சாம்ஸ்கி போன்ற உலகச் சிந்தனையாளர்கள் பற்றியும் கட்டுரைகள் உண்டு. இந்தத் தலைப்புகளைத் தமிழவன் தம் பல ஆண்டு அனுபவத்தால் மிகப் புதியதாய் அணுகியுள்ளார். அண்மைக் காலத்தில் தமிழில் இதுபோன்று ஒரு நூல் வரவில்லை. இன்றைய உலகமும் இலக்கியமும் பின்னிப்பிணைந்துள்ளதைப் பற்றி அறிய விரும்பும் ஒவ்வொருவரும் வைத்துக்கொள்ளவேண்டிய நூல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.