Description
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் (1950களில்) பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை. சுகுமாரன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.