முற்போக்கு எழுத்தின் தடங்கள் (பாகம் - 1)
₹250 ₹238
- Editor: அ இலட்சுமிகாந்தன், அ உமர் பாரூக்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: கட்டுரை
- Publisher: பாரதி புத்தகாலயம்
Additional Information
- Pages: 256
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
நம்மைச்சுற்றி நிகழும் எல்லாவற்றையும் நாம் அறிந்து கொள்வதில்லை. அறிந்துகொண்ட சொற்ப விசயங்கள் பற்றியும் நாம் ஆழ்ந்து யோசிப்பதில்லை. ஒருவேளை யோசித்தாலும் கூட வெளிப்படையாக ஏதும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறோம். இவ்விடத்தில் தான் கருணா வேறுபடுகிறார்.
உலகளாவிய நடப்புகளை உன்னிப்பாகக் கவனித்து வந்த அவர் அவற்றைப் பற்றி, தான் நினைப்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதை தனது திட்டமிடப்பட்ட பணிகளில் ஒன்றாகச் செய்துவந்தார். இதற்காக அவர் சமூக ஊடகங்களை வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்துகிறவராக இருந்திருக்கிறார்.
அரசு, ஆட்சி, சாதி, குடும்பம், மதம், கலை இலக்கியம், பாலினம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் மீதெல்லாம் கருத்து சொல்ல யாரோ அந்தரலோகத்தில் பிறந்து அமானுஷ்ய சக்தியோடு வரப்போவதில்லை. மானுடத்தோடு தொடர்புடைய அனைத்தின் மீதும் கருத்துச்சொல்ல நமக்கு உரிமையும் துணிவும் வெளிப்படுத்தும் திறனும் உண்டு என்கிற புரிதல் கருணாவுக்கிருந்தது.
தன்மீது நேர்மறை / எதிர்மறை தாக்கம் செலுத்திய புத்தகங்கள், திரைப்படங்கள், ஓவியங்கள், நாட்டுப்புறக் கலைகள், கலை இலக்கிய ஆளுமைகள், அரசியலமைப்புகள், சமூக நடப்புகள் என விரிந்திருந்தது அவரது எழுத்துப்பரப்பு. அதன்பேரில் அவர் அவ்வப்போது சமூக ஊடகங்களில் எழுதிய பதிவுகளின் தொகுப்பு இது.
பொழுதை வீணடிப்பதற்கோ சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதற்கோ அல்லாமல் தான் நம்பும் கருத்தியலுக்கு ஆதரவாக வெகுமக்களைத் திரட்டுவதற்கான ஓர் உரையாடல் தளமாக கருணா சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவந்தார். அதிகாரத்தை விமர்சிக்கிற கருணாவின் பதிவுகளில் ஆவேசமும் பகடியும் தெறிக்கும் அதேவேளையில் ஒடுக்குதலுக்கு ஆளாகிற சமூக அடுக்கினர் மீதும் அவர்களது போராட்டங்களின் மீதும் அக்கறையும் தோழமையும் இழைந்தோடும். பிற்போக்குத்தனங்களையும் விதண்டாவாதங்களையும் எள்ளலுடனும் கூரிய விமர்சனத்துடனும் எதிர்கொண்ட கருணா, மாற்றுக் கருத்துள்ளவர்களை இசையவைத்து எதிர் முகாமிலிருந்து இழுத்துக் கொள்வதற்காக எழுதிய பதிவுகள் மதிக்கத்தக்கவை. அதனாலேயே பல்வேறு கருத்தோட்டமுள்ள அமைப்புகளைச் சார்ந்தவர்களும் சாராதவர்களும் அவரது நட்பு வட்டத்தில் உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்தார்கள்.
கருணாவின் இறப்புக்குப் பிறகும்கூட அவரை, அவரது கருத்துகளுக்காக மெய்நிகர் வெளியிலும் நடப்புலகிலும் நினைவுகூர்ந்திடும் இந்த அன்பர்கள் கையில் இந்தத் தொகுப்பினைச் சேர்த்திடும் முயற்சியை மேலெடுத்துச் சாதித்த சிராஜூதீன் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும்
கருணா குரலில் ஒரு ‘சுபோ ஜெயம்’
-ஆதவன் தீட்சண்யா
Be the first to review “முற்போக்கு எழுத்தின் தடங்கள் (பாகம் – 1)” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.