Description
பின்-மார்க்சியரான ஃப்ரெடரிக் ஜேம்சன் சொல்வதைப்போல, ‘கறாரான மதிப்பீட்டைவிடவும் எழுத வருவதே ஓர் அரசியல் செயல்பாடு’ என்ற வகையில் மனிதசமூகத்தை அரசியல்மயப்படுத்தும் அவசியத்தில் இன்றைய மொழிக்கு அதிக முரண்பாடுகள்தேவைப்பட்டிருக்கிறது. அதுபோக புதிய உற்சாகமான அமைப்பு மற்றும் நிறுவனம் சாராதவெளிகள் கருக்கூடி வந்திருப்பதை காணமுடிகிறது. இது கலையைப் பூடகப்படுத்தும் செயலைவிட அருள், தரிசனம், மெய்மைகள் என்று நீளும் தனிச்சிறப்பான ஒரு காலகட்டத்தை கடந்து வந்துவிட்டதையே காட்டுகிறது.
மேலும் கலைக்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு மறைந்துவருகிறது என்றும் கூறலாம். இன்று மரபான அழகியலுக்கும் உடனடி அத்தியாவசியங்களுக்கும் இடையே மானுடம் திண்டாடுகிறது. அவற்றையே இக்கட்டுரைகளில் இற்றைப் படுத்தியுள்ளேன்.
– யவனிகா ஸ்ரீராம்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.