உப்பை இசைக்கும் ஆமைகள்
Rated 0 out of 5
( 0 reviews )₹80 ₹76
You save ₹4.00 (5%) with this book
- Author: சூ சிவராமன்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: கவிதை
- Publisher: கொம்பு வெளியீடு
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Book will be shipped within 5-10 working days.
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
“யாரனங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.”
இயல்பான கடலின் ஓசை யாராலோ துன்புறுத்தப்பட்டு எழுப்பப்படுவதாக யாவரும் ரசிக்கத்தக்கதாக எழுதப்பட்டிருக்கும் அம்மூவனாரின் இக் குறுந்தொகைப் பாடலை நினைவில் தூண்டி காடலெனப்படுவது யாதென சொல்லப்பட்டிருக்கும் பட்டியல் கடல்மீது நமக்கிருக்கும் வியப்பை பெருக்கடையச் செய்வதாக உள்ளது.
பச்சை உடம்புக்காரிக்கான குருவித்திருக்கை மணம் நண்டு குழம்பின் மணத்தோடு நம் மனதில் கொதிக்க வைத்து, கடலையும், கடல் சார்ந்த வாழ்வையும் நம்முள் நங்கூரமிட்டுச் செல்கின்றன கவிதைகள்.
விண்மீனைத் தொடுதல் சாத்தியமற்றது. ஆனால் நினைவில் தொடச்செய்து அது உருவாக்கும் சலனத்தைக் கண்டு இருப்பிடம் சேர்வேன் எனக் கூறும் காதலன் கூற்றில் சங்கத் தொடர்ச்சியை காண முடிகிறது.
உன்மத்தம் பிடித்த காற்றின் அலைச்சலில் காதலர்களின் மனப்போக்கை, இரங்கல் நிமித்த வதை, நினைவுகளான முத்த வாசனை, கலவிச் சுவை ஊறச் செய்யும் குழம்பின் மணம், துளிர்க்கும் வியர்வையில் வரும் ஒரு மரக் கள்ளின் வீச்சம், வானில் முளைக்கும் நட்சத்திரங்கள் காதலர்கள் என அறிந்து கொண்டதில் உண்டான பரவசம், உப்புக் கல் குறித்த உரையாடலில் உண்டான வலி தீராது அலைவுறுதல், நம்மையும் சுடலையாக நிற்க வைக்கின்றன கவிதைகள்.
சிற்றில் கட்டி விளையாடுதல் போன்ற கடல் சார்ந்த விளையாட்டுகள் குறித்த கவிதைகளும் இருந்திருக்கலாம்.
சுட்டுப் பொசுக்கியது போக மீந்த சொற்களில் கச்சிதங்களோடு கோர்க்கப்பட்டிருக்கும் உப்பை இசைக்கும் ஆமைகள் தொகுப்பின் கவிதைகள் வசீகரம்.
மகிழ்ச்சி சூ.சிவராமன்.
Be the first to review “உப்பை இசைக்கும் ஆமைகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.