கொலுசொலியே கடலென
ஓடாமல் நின்று விட்ட நதி
மழையெனப் பொழிகிறது
இந்த முற்றத்தில்.
கனவுக்குள் தாழ் நீக்கி
யதார்த்தத்தில் பூட்டிக் கொள்ளும் கதவு
உனக்கும் எனக்கும் நடுவில்.
கவிதைகளில் நீந்தி நீந்தி வரும்
குவளைகளை
நான் பார்த்தது
உறக்கத்திலா?
விழிப்பிலா?
உன் ஊடலைப் போல் நழுவும்
இன்னொரு குவளையை
உடைத்து நொறுக்குகிறது
நம்மை யாரோவாக்கி விட்ட காலம்.
யார் யாரோ வளர்த்த காதலில்
பறித்து வந்த கொழுந்தை
என் மேனிக் கொதிப்பில்
ஊற வைத்திருக்கிறேன்.
அது தேநீராய்த் திரண்டு வருகையில்
இரு இதழ்களுக்காய்
மீந்திருக்கட்டும்
காதலெனும் வெறுங் கோப்பை.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.