என்னுடைய பால்யத்தில் கட்சி நாடகங்கள் பார்த்திருக்கிறேன். அதே பிரச்சார தொனியில் நம்ம ஜனங்கள் வேறு பல நாடகங்களும் போடுவார்கள். அவை சிறுசேமிப்பு, மக்கள் தொகைக் கட்டுபாடு, குடி குடியை கெடுக்கும் போன்றவைகளை போதிக்கும். ஜனக் கூடத்தை ஸ்கூல் பசங்க மாதிரி உக்கார வைத்து, நீதி வெற்றி பெற வேண்டியதை பிரகடனம் செய்கிற அதிகாரத்தை உருவிக் கொள்ளும்.
யோசித்துப் பார்த்தால், கூட்டிக் கழித்தால் வருகிற சராசரி தமிழ் சினிமா அந்த சிறுபிள்ளைத்தனமான அகங்காரத்தில் இருந்து இன்று வரையிலும் விலகியிருக்கவில்லை. முழக்கங்கள் மாறியிருக்கலாம் நாங்க இதைத் தான் பண்ணுவோம் என்கிற மூர்க்கம் ஒன்று தான்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.