“இரவென்பது சந்திராவின் மொழி, சந்திராவுடையது. இறுக்கமும், வாசிப்பவரின் கவனத்தைச் சிதறவிடாமல் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் பாணி அவருக்கு வாய்த்திருக்கிறது. அவர் அனுபவத்தை எழுதுகிறார். எல்லோரும் அனுபவத்தைத் தானே எழுதுகிறார்கள். ஆம் சரிதான் ! தன் அனுபவத்தின் ரகசியத்தை அவர் எழுதுகிறார். அதாவது, வாழ்வின் மேல் அடுக்கை அல்ல ; அதன் மடங்கிய உள் அடுக்கை , ரகசியமாகத் தட்டியவுடன் திறக்கத் தயாராக இருக் கும் ரகசியார்த்தங்களை எழுதுகிறார். ‘வானில் பறக்கும் புள் எலாம் நான் ’ என்று நம் கவி சொல்வது இதைத்தான் . இது ஒரு பேரனுபவம். எல்லாம் தாமாகவும், எல்லாவற்றிலும் தாமாகவும் ஆவது என்பதும் இதுதான் . தி. ஜானகிராமனின் ஒரு பாத்திரம். எல்லோரை யும் அணைத்துக்கொண்டு, அன்பே தானாய், தன்னைப் பனி நீராய் மாற்றிக்கொ ண்டு தெளிப்பாள். நம் கதைக்காரர் சந்திராவும் அப்படித்தான் .” – பிரபஞ்சன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.