ஏ.கே. செட்டியார் படைப்புகள் (இரண்டு பாகங்கள்)
அறியப்படாத பல அரிய கட்டுரைகளின் முழுத் தொகுதி
₹2,000 ₹1,900
- Author: ஏ கே செட்டியார்
- Category: பயணம் & சுற்றுலா
- Sub Category: கட்டுரை
- Publisher: சந்தியா பதிப்பகம்
↪ Orders can take 1-4 business days to process before shipping. As soon as your package has left our warehouse, you will receive a confirmation by email.
↪ If the book is unavailable or out of stock, the total order value (including shipping fee) will be refunded to your account within 2 business days.
Additional Information
- Pages: 2136
- Edition: 1st (First)
- Year Published: 2016
- Binding: Hardcover
- Language: தமிழ்
- ISBN: 9789384915650, 9789384915667
Description
ஏ.கே.செட்டியாரைப் போன்ற ஆளுமைகள் தமிழில் அபூர்வம். அவர் எழுதிய ‘உலகம் சுற்றும் தமிழன்’ எனும் நூலின் தலைப்பே அவரைக் குறிக்கும் அடைமொழியாயிற்று. அந்த அளவுக்குப் பயணம் செய்தவர். தனது அனுபவங்களை எழுத்தாக்கியவர். கடும் உழைப்பு, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத தன்மை, துணிச்சலான நடவடிக்கைகள் என்று தொடர்ந்து இயங்கிய ஏ.கே.செட்டியார் மூலம் தமிழுக்குக் கிடைத்த ஆவணங்கள் ஏராளம். காந்தியைப் பற்றி அவர் எடுத்த ஆவணப்படம் அவரது உழைப்புக்கும், வரலாற்றின் மீதான பார்வைக்கும் உதாரணம். அவர் நடத்திவந்த ‘குமரிமலர்’ இதழில் அவர் எழுதாத விஷயங்களே இல்லை எனலாம். இரண்டு தொகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொகுப்பில் அவரது கட்டுரைகள், அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களுடன், அவர் எழுதிய சிறுகதையும் இடம்பெற்றிருப்பது தனிச் சிறப்பு.
ஏ.கே.செட்டியாருக்கு அறிமுகம் தேவையில்லை.ஆனால் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத சுபாவத்தால் இவரது பிரபல்யம் பெயரளவில் மட்டும் சுருங்கிவிட்டது. இந்திய அளவில் ஆவணப்பட இயக்கத்தின் முன்னோடி இவர். ‘மகாத்மா காந்தி’ படம் எடுத்தவர். ‘குமரிமலர்’ பத்திராதிபர். காந்தியை நேரில் கண்டவர். நேத்தாஜீ உடன் நெருங்கிப் பழகியவர். பாரதி குறித்த ஆய்வுலகின் விதை நெல். ஒருமுறையல்ல மூன்று முறை உலகம் சுற்றிய தமிழர். இதில் இவர் ரஷ்யாவுக்கு மட்டும் சென்றதில்லை. காந்தியவாதி, சுத்த சுதேசி,காப்பி பிரியர், ஒழுக்க சீலர். நவீன பயண இலக்கியத்தின் தலைவாசல். இவரது ‘குடகு’ ஓர் இனவரைவியல் ஆவணம்.
இவரது வாழ்க்கையில் பட்டினி இருந்தது, பஞ்சம் இல்லை. பணமிருந்தது, ஆடம்பரமில்லை. புகழ் இருந்தது, பகட்டில்லை. அரசியல் இருந்தது, அதிகாரம் இல்லை. செட்டியாரைப் பற்றி நினைக்கும் போது ஞாபகத்தில் வருவது இரண்டு. ஒன்று அவரின் அயராத உழைப்பு. இரண்டு, சோரம் போகாத பிழைப்பு.
முதன் முறையாக அவரது முழுப்படைப்புகள் பலச் சிரமங்களைத் தாண்டி இரு தொகுதிகளாய் நூலாக்கம் பெறுகிறது. இதில் ஏறக்குறைய 30 கட்டுரைகள் இதுவரை நூல்வடிவம் பெறாதவை. கூடவே ‘பஸ் பிரயாணம்’ தொகுப்பும் முதன்முறையாக நூலுருவம் பெறுகிறது. ஒட்டு மொத்தமாக, தவறுகள் களைந்த தரமான பிரதியாக வருகிறது. இத்தனைக் காலங்கள் கடந்து ஏ.கே.சி குறித்து தன் ஆய்வில் புதிய வெளிச்சங்களைக் கண்டடைந்திருக்கிறார் கடற்கரய் மந்தவிலாச அங்கதம். அதற்கு அவரது அசலான முன்னுரை சான்று.
ராகுல சங்கிருத்தியாயானைப் பேசும் நாம், ஏ.கே. செட்டியாரைப் பேசத் தவறிவிட்டோம்.யுவாங் சுவாங் பாடத்தில் வைத்து செட்டியாருக்கு நாம் வஞ்சகம் செய்துவிட்டோம். மனுச்சிய படிக்க கற்றுத்தந்த நாம் ஒரு மாமனிதனைக் காணாமற் போனோர் பட்டியலில் போட்டுப் புதைத்துவிட்டோம். மார்க்கோபோலோவும், வாஸ்கோடகாமாவும் தான் நமக்குப் பயணிகள். மிளகைத் தேடி இந்தியா வந்த வியாபாரி ஓர் அறிவாளியாகிவிட்டான். காப்பிக் கொட்டையைக் கொண்டு வந்து இந்தியாவில் விதைத்த இந்திய வேளாண்மை விஞ்ஞானி வரலாற்றிலிருந்து வெட்டி வீழ்த்தப்பட்டான். தேசபிதா படத்தை டிரங்கு பெட்டியில் வைத்து, தலையில் தூக்கிச் சுமந்த சுத்தயோகி ஒருவரின் சுயசரிதையை நாம் சுத்தமாய் மறந்துவிட்டோம். அழுத்திச் சொன்னால் நம் அடையாளம் எதுவென்பதையே அணுவணுவாய் இழந்துவிட்டோம். இக்குறையை இத்தொகை நூல் தீர்க்கும்.
Be the first to review “ஏ.கே. செட்டியார் படைப்புகள் (இரண்டு பாகங்கள்)” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.