Description
இலைகளை மμத்திண் குழந்தைகளாகக் கருதுவது வழக்கம். உண்மைதான், அவை மரத்தின் குழந்தைகள்தான், மரத்திலிருந்து பிறந்தவை அவை, அதே நேμத்திஅ அவையெல்லாம் மரத்திண் அன்னைகளும்கூட. பச்சையான சாறு, நீர், கனிமங்கள் ஆகியவற்றைச் சூரிய ஒளி, காற்று ஆகியவற்றின் உதவியால், மரத்துக்கு ஊட்டமளிக்கக்கூடிய கலவையான சாறாக மாற்றுவது இலைகள்தான்.
நாம் அனைவரும் இந்தச் சமூகத்தின் குழந்தைகள், அதே நேரத்தில், நாம் இந்தச் சமூகத்தின் அன்னையரும்கூட. சமூகத்துக்கு நாம் ஊட்டமளிக்க வேண்டும். சமூகத்திலிருந்து நம்மை நாமே துண்டித்துக்கொண்டால் நாமும் நம் குழந்தைகளும் வாழ்வதற்கு ஏற்ற மேலான ஒரு இடமாக அதை மாற்ற முடியாது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.