Description
தமிழகத்திலிருந்து இந்திய அளவில் செயல்பட்ட முன்னோடி தலித் தலைவர். நவீன இந்தியாவில் ஒடுக்கப்பட்டோர் தரப்பை பிரதிபலித்தவர். சிறந்த கல்விமான்; நவீன காலத்தின் மதிப்பீடுகளை ஏற்றவர்; பல்வேறு மாநாடுகள் விண்ணப்பங்கள் உரைகள் விவாதக் குழுக்களில் பங்கெடுத்தல், குழுக்களை சந்தித்தல் என்று அவர் பணிகள் நீண்டவை. குறிப்பாக நிகழ்காலத்தில் பேசப்படாமல் போனவர்களில் ஒருவர்தான் எம்.சி.ராஜா. அப்பேர்ப்பட்டவரின் சிந்தனைகளைத் தான்
இத்தொகுப்பு தாங்கி நிற்கிறது. அதைத்தான் நீலம் பதிப்பகமும் வெளியிட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் உரிமை சார்ந்து எதிர்மறையாக பார்க்கப்பட்டு வந்த காந்தி பற்றிகூட சாதகமான பார்வைகளை விவாதிக்க ஆரம்பித்துவிட்ட நாம், பூனா ஒப்பந்தம் தவிர்த்த மற்ற காலங்களில் தனித்தும் அம்பேத்கர் உள்ளிட்டவர்களோடு இணைந்தும் செயல்பட்டு வந்த பெருந்தலைவர் எம்.சி. ராஜாவை பற்றி அறியாத பல தகவல்களை இந்நூல் உள்ளடக்கி இருக்கிறது என்பது இந்நூலின் சிறப்பம்சம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.